Tap to Read ➤

வேப்ப எண்ணெய்யின் மருத்துவ குணங்கள் என்னென்ன?

மருத்துவ குணமுடைய வேப்ப மரம், நாட்டின் பூர்வீக மரமாக விளங்குகிறது.
HTML Tamil
பழங்காலம் முதலே பாரம்பரியமாக மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில், வேப்பரத்தின் பொருட்கள் முக்கியமானதாகும்.
வேப்ப மரத்தின் இலையில், ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
வேப்ப மரத்தின் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் வேப்ப எண்ணெய்யில், அழற்சி மற்றும் பாக்டீரியா, பூஞ்சைகளை எதிக்கும் பண்புகள் நிறைந்துள்ளன.
பல்வேறு மருத்துவக்குணம் கொண்ட வேப்ப எண்ணெய் மூலம் நாம் பெறும் நற்பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
முகப்பருக்கள், தடிப்புத் தோல், அழற்சி போன்ற தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த மருந்தாக உள்ளது.
வேப்ப எண்ணெய், உடலில் ஏற்படும் காயங்களில் கிருமித் தொற்று ஏற்படுவதை தடுப்பதோடு, காயங்களை விரைவாக குணமாக்கிறது.
மழைக்காலங்களில் சேற்றில் இருக்கும் கிருமிகளால் ஏற்படும் சேற்றுப்புண்கள் மற்றும் படர் தாமரை போன்றவற்றை குணமாக்கிறது.
வேப்ப எண்ணெய்யை அரை டீஸ்பூன் குடித்தால், வயிறு மற்றும் குடல்களில் ஏற்படும் பூச்சிகள் அழிந்துவிடும்.
புற்று நோய் வராமல் தடுக்கும் திறன் கொண்ட வேப்ப எண்ணெய்யை, சிறிதளவு குடித்து வந்தால், உடலின் உள்ளுறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
சொரியாசிஸ் போன்ற கொடுமையான தோல் நோயால் பாதிக்கப்படுவர்கள், வேப்ப எண்ணெய்யை தினமும் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய்யை கலந்து தலையில் தடவி வந்தால், பொடுகு, பேன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.