Tap to Read ➤

பிஸ்தாவில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன?

பிஸ்தா பருப்பில் பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன.
HTML Tamil
பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார் சத்துக்கள் நிறைந்துள்ளன.
பிஸ்தா பருப்பில் உள்ள வைட்டமின்கள் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு பயன்படுகிறது.
பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து, தினமும் மாலையில் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ சத்தானது, தோல் பாதிக்காமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.
பிஸ்தாவில் உள்ள கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரையைப் பாதுகாத்து, தெளிவான பார்வைக்கு வழிவகுக்கிறது.
பிஸ்தா, இதய நோய்கள் வரும் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டாதாக விளங்குகிறது.
பிஸ்தா பருப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து, ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும் திறன் கொண்டது.
கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிப் பெண்கள் பிஸ்தா பருப்பை சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமானத்தை சீர் செய்து, மலச்சிக்கலை தடுக்கும் திறன் கொண்டது.
மன அழுத்தத்தால் வரும் ரத்தக் கொதிப்பை தடுக்கு ஆற்றல் பிஸ்தா பருப்புக்கு உண்டு. ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.