Tap to Read ➤

வாழ்க்கையை வீணடிக்கும் தவறுகள் என்னென்ன?

ஒருவரின் செயல்பாடே அவரின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறது.
HTML Tamil
'காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது' என்பதற்கு ஏற்ப, நேரத்தை செலவிடுவதில்தான் ஒருவரின் வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது.
இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வேலைகளை, நாமே செய்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
என்னென்ன தவறுகள், ஒருவரின் வாழ்க்கையை வீணடிக்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பணத்தைப் பார்த்துப் பார்த்து செலவு செய்யும்போது, நேரத்தை மட்டும் திட்டமிடாமல் அதிக நேரம் உறங்குவதால் காலம் விரயம் ஆகிறது. இதனால் வாழ்க்கை முன்னேற்றம்  பாதிக்கிறது.
காலையில் சீக்கிரம் எழாமல், வேலைகளை தள்ளிப் போடுவதும், சரியான வேளைக்கு உணவு சாப்பிடாமலும் தவிர்ப்பது தவறாகும்.
உடல் சீராக இயங்க உடற்பயிற்சி முக்கியம் என்றும் தெரிந்திருந்தும், உடற்பயிற்சி செய்யாமல் நன்றாக உறங்குவதும் தவறாகும்.
இரவில் சரியாக உறங்காமல், செல்ஃபோனில் சாட்டிங் செய்வது போன்ற பழக்கங்களும், வாழ்க்கையை வீணடிக்கும் செயலாகும்.
இரவில் செல்ஃபோனில் நேரத்தை கழித்துவிட்டு, தேவையற்ற நேரங்களில் பகலில் உறங்குவதால்  நேரம் வீணடிக்கப்படுகிறது.
விடுமுறை தினங்களில் தொலைக்காட்சியை விட்டு நகராமல், தொடர்ந்து பார்வையிடுவதால், உடல் சக்திகள் இழந்து சோர்வு ஏற்படும்.
இணையதளத்தில் பப்ஜி, ப்ரீபயர் உள்ளிட்ட வீடியோ கேம்ஸ்களை விளையாடுவது காலத்தை வீணடிக்கும் செயலாகும்.
சிறிய விஷயத்திற்கும் கோபப்படுவதும், நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவை மாற்றிக்கொள்வதும் வாழ்க்கையை வீணடிக்கும் செயலாகும்.