Tap to Read ➤

பணியாற்றும் இளைஞர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன?

உடல் நலத்தில் இளைஞர்கள் அலட்சியத்துடன் இருக்கக்கூடாது.
HTML Tamil
படித்து முடித்து பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் இளைஞர்கள், தங்கள் உடல் நலம் பற்றி கவலைப்படுவதில்லை
இளைஞர்களின் இந்த அலட்சியப்போக்கு, அவர்களின் உடல் நிலை மோசமடைய செய்யும் தூண்டுகோலாக மாறுகிறது.
உடல்நலத்தில் சிறிதும் கவலையில்லாமல் இருப்பதால், 60-70 வயதுகளில் வரக்கூடிய நோய்கள், 30 வயதிலேயே வரும் சூழல் உருவாகிறது
இளைஞர்கள் என்னென்ன தவறுகளை செய்து, தங்களது உடல் நலத்தை பாதிப்படைய செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வோம்.
வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், காலையில் எழுவது முதல் இரவு படுப்பது வரை மெத்தனத்துடன் இருந்து நேரத்தை வீணடிக்கிறார்கள்.
இளைஞர்கள் காலை உணவை தவிப்பது வாடிக்கையாகி விடுகிறது. வெளியூரில் வேலை என்றால், தவறான உணவுப் பழக்கத்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை அளவுக்கு அதிகமாக அணுகுவதால், உடலும், மனதும் பாதிக்கப்படுகிறது.
பணியிடத்தில் அதிகப்படியான வேலைப்பளுவால் ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க, சிகரெட், மதுப்பழக்கம் என வாழ்க்கை முறையை மாற்றுகிறார்கள்.
படிக்கும் காலத்தில் தொடர்ந்து செய்து வந்த உடற்பயிற்சியை, பணியில் சேர்ந்தவுடன் இளைஞர்கள் குறைத்து விடுகிறார்கள்.
உடல் உழைப்பு குறைந்து, உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதால், கொழுப்பு அதிகரித்து, உடல் உபாதைகள் உண்டாகிறது.
இரவு நேரப்பணி மற்றும் சமூக வலைதளங்களில் நீண்ட நேரம் செலவிடுவது போன்ற காரணங்களால் இரவுத் தூக்கம் தடைபடுகிறது.
போதிய தூக்கம் இல்லாத காரணத்தால், உடல் சோர்வு ஏற்பட்டு, இளம் வயதிலேயே பல்வேறு நோய்கள் உண்டாக காரணமாகிறது.