Tap to Read ➤

நாய்களின் செயல்களில் உள்ள சகுன பலன்கள் என்னென்ன ?

நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க ..!!
Sidhanathan K
நாய்கள் பொதுவாக மனிதர்களிடம் மிகவும் அன்பாகவும் நன்றியுடனும் இருக்கும். இதனால் அனைவரும் தங்கள் வீடுகளில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.
நாய் கால பைரவரின் வாகனமாகவும் கருதப்படுகிறது. வாய் இல்லாத ஜீவனாக இருப்பதால் அதன் செயல்களால் பல சகுனங்களை காண முடியும்.
ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்லும்போது எதிர் திசையில் இருந்து நாய் வந்தால் செல்லும் காரியம் நினைத்தபடி வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் வெளியே செல்லும்போது ஒரு நாய் செருப்பு அல்லது இறைச்சித் துண்டை எடுத்துக்கொண்டு நம் முன் வந்தால் நாம் நினைத்தது நிறைவேறும் என்றும் அர்த்தமாம்.
வீட்டில் உள்ள நாய் சாப்பிடாமலும், கண்ணீர் விட்டுக்கொண்டும் இருக்க காரணம் வீட்டில் உள்ள ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல்போகும் என்றும் அவர்களுக்கு நேரம் சரியில்லை என்பதை உணர்த்தவே இந்த சகுனத்தைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
வெளியில் செல்லும்போது நாய் மாடுகளுடன் விளையாடுவதைப் பார்த்தால் அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தரும் என்பது நம்பிக்கை.
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது உங்கள் வீட்டு நாய் உங்களை போகவிடாமல் தடுப்பதற்குக் காரணம், சில திருடர்களால் உங்களுக்குப் பிரச்சனைகள் வரப்போகிறது என்றும் அர்த்தமாம்.
மேலும் வெளியில் செல்லும் போது நாய் உங்கள் பாதங்களை மிதித்தால் விபத்து ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
நள்ளிரவில் நாய்கள் திடீரென ஊளையிடுவது/அழுவது கெட்ட சகுனம் என்றும், மரணத்தின் அறிகுறி என்றும் பலருக்கு மூடநம்பிக்கை உள்ளது. அனால் அது பொதுவான விஷயம் தான்.
நாய்கள் மனிதர்களிடம் மிகவும் பாசமாக பழகும் விலங்கினம் என்பதால், இரவில் தனியாக இருக்கும்போது கவலைப்பட்டு அழுகிறது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
மேலும் அவ்வாறு அழுவது நமது கவனத்தை ஈர்க்கத்தான். அந்த சமயங்களில் அதன் அருகில் நின்று பேச்சு கொடுத்தால் அது அமைதியாகிவிடும் எனவும் கூறுகிறார்கள்.