Tap to Read ➤

சுகப்பிரசவம் அமைய செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து சுகப்பிரசவம் அமைகிறது.
HTML Tamil
கருவுற்ற பெண்கள், தனக்கு பிரசவம் சுகமாக நிகழவேண்டும் என்றும், ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் எனவும் விரும்புவார்கள்.
பிரசவத்தின்போது வலி தெரியாமலும், சுகப்பிரசவம் அமையவும் கர்ப்பிணிப் பெண்கள் செய்யவேண்டிய எளிய வழிமுறைகளை பார்ப்போம்.
சுகப்பிரசவம் எளிதாக அமைய, கர்ப்பிணிப் பெண்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டால், உடல் சீரான நிலையுடனும், நெகிழும் தன்மையோடும் மாறும்.
கர்ப்பிணிப் பெண்கள் சிறிய உடற்பயிற்சிகளை செய்யலாம். அல்லது தினமும் படிக்கட்டுகளில் அரை மணி நேரம் ஏறி இறங்கி பயிற்சி செய்யலாம்.
கர்ப்பிணிப் பெண்கள், முடிந்தவரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. குனிந்து, நிமிர்ந்து வேலை செய்வதால், இடுப்பு எலும்புகள் மற்றும் இடுப்புத்தசைகளின் நெளிவுத்தன்மை விரிவடையும்.
தரையில் அமர்ந்து கொண்டும் வீட்டு வேலைகளை செய்யலாம். இதனால் உடல் பலவீனமாகாது. ஆழ்ந்த தூக்கத்தையும் தரும்.
கர்ப்பிணிப் பெண்கள், டென்சன் ஆகாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தால், அவர்களுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் மிகவும் நல்லது.
கர்ப்பிணிப் பெண்களின் உடல், சற்று தளர்ச்சியாகக் காணப்படும் என்பதால், ஆரோக்கியமான உணவு மற்றும் பழங்களை சாப்பிடுவது அவசியமாகும்.
சுகப்பிரசவம் ஆக தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில், சீரகம், பனங்கற்கண்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து கசாயமாக குடிக்கலாம்.
தினமும் மாதுளை பழத்தை சாப்பிட்டால், தாய் மற்றும் குழந்தையின் உடம்பில் உள்ள ரத்த அணுக்களை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
சுகப்பிரசவம் அமைய விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், தினமும் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்குவது மிகவும் அவசியமாகும்.
சுகப்பிரசவம் அமைய, கர்ப்பிணிப் பெண்கள், 7 மாதத்திற்குப் பின்னர் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும்.