Sidhanathan K       May 22, 2024

மாரடைப்புக்கான அறிகுறிகள் என்னென்ன..? அதை எப்படி கண்டறிவது..?

ஜிம்முக்கு செல்பவர்களும், பிரபலங்களும் மாரடைப்பால் இறப்பதை அடிக்கடி செய்திகளில் பார்க்கின்றோம். மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் முற்றிலுமாக தடைபடும் போது தான் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கான அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறிவது குறித்து இந்தப்பதிவில் பார்க்கலாம்.

உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு, மன அழுத்தம் மற்றும் புகைபிடித்தல் போன்ற பல்வேறு காரணிகளால் மாரடைப்பு ஏற்படலாம்.

பொதுவாக, ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு முன், தாடை வலி, இடது தோள்பட்டையில் வலி, மூச்சுத்திணறல், சோர்வு, அதிகமாக வியர்த்தல் மற்றும் தொண்டை அடைப்பது போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

அதேபோல், மாரடைப்பு ஏற்படுவதற்கு முன், ஒரு நபரின் சருமம் வெளிர் மற்றும் சாம்பல் நிறமாக மாறும். மேலும், கவலை மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள்கூட தோன்றும்.

தூங்குவதில் சிரமம், தூக்கத்தில் இருந்து திடீரென எழுந்திருப்பது தூக்கமின்மையின் அறிகுறிகளாகும். ஒருவருக்கு தொடர்ந்து தூங்குவதில் சிக்கல் இருந்தால், மாரடைப்பு ஏற்பட அதுவே காரணமாக அமைகிறது.

எம்ஆர்ஐ (MRI) எனப்படும் சிறப்பு அல்ட்ராசவுண்ட் மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG அல்லது EKG) சோதனைகள் மூலம் மாரடைப்பை கண்டறியலாம்.

ஒருவர் மாரடைப்பால் பாதிக்கப்படும்போது, முதலுதவியாக Cardio Pulmonary Resuscitation (CPR) செய்ய வேண்டும். மார்பில் கைகளை வைத்து நன்கு அழுத்த வேண்டும்.

சீரான உணவை பின்பற்றி, ஆரோக்கியமான எடையை பராமரிப்பதன் மூலம் மாரடைப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

அதேசமயம், அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் சீரான இடைவெளியில் சிறிது நடக்க வேண்டும். அதேபோல், தினமும் குறைந்தபட்சம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்யலாம்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories