Tap to Read ➤

மனைவியிடம் கணவர் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னென்ன?

தான் நினைப்பதுபோல் மனைவி இருக்க வேண்டும் என கணவர் நினைப்பதுண்டு.
HTML Tamil
கணவர் எதிர்பார்த்தப்படி மனைவி நடந்துகொள்வதும், மனைவியிடம் கணவர் அன்பாக இருப்பதுமே குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
மனைவியிடம் கணவர் எதிர்ப்பார்க்கும் சில விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மனைவி எப்போதும் அன்பாகவும், பிரியமாகவும் இருக்க வேண்டும். கோபப்பட்டு மனது புண்படும்படி பேசக்கூடாது.
கணவரின் வீட்டாரிடையே மனைவி அனுசரித்துப் போக வேண்டும். மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
குடும்ப ஒற்றுமைக்கு மனைவி உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி உள்ளிட்டோரை பிரிக்க நினைக்கக் கூடாது.
குறிப்பிட்ட நேரத்திற்கு நல்ல முறையில் சுவையான உணவு தயாரித்து, மனைவி பரிமாற வேண்டும்.
கணவரின் குறைகளை வெளியே சொல்லக் கூடாது. கணவர் மீது மனைவி சந்தேகப் படக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
கணவர் வீட்டுக்கு வந்தவுடனும், சாப்பிடும் போதும் குடும்ப பிரச்சனைகள் குறித்து மனைவி பேசக்கூடாது.
குழந்தைகள் படிப்பில் மனைவி அக்கறை செலுத்த வேண்டும். கணவர் குழந்தையை கண்டிக்கும்போது மனைவி எதிர்வாதம் கூடாது.
வீட்டின் தேவைகளை முன்கூட்டியே சொல்ல வேண்டும். எதிர்காலத் திட்டங்கள் குறித்து மனைவி ஒத்துழைக்க வேண்டும்.
அளவுக்கு மீறி மனைவி ஆசைப்படக் கூடாது. வீட்டிற்கு கொடுக்கும் பணத்தை சிக்கனமாகவும், சீராகவும் செலவு செய்து குடும்பம் நடத்த வேண்டும்.
மனைவியின் தாய் வீட்டில் கணவரைப் பற்றி குறைக் கூறினால் மறுத்துப் பேச வேண்டும். கணவரை எப்போதும் விட்டுக் கொடுக்கக்கூடாது.
ஒளிவு, மறைவின்றி கணவரிடம் அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக மனைவி தெரிவிக்க வேண்டும்.
கணவருக்கு உடல் நலம் இல்லாதபோது கண்ணும் கருத்துமாக மனைவி உடனிருந்த கவனிக்க வேண்டும்.