Tap to Read ➤

பெண்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை?

தெரிந்துகொள்ளவேண்டியவை!
varalakshmi n
உங்களை தெளிவாக அறிமுகம் செய்துகொள்ள தெரிய வேண்டும்,10 வரிகளில் உறவு/நட்பு வட்டங்களில்
பேச்சு திறமை வேண்டும்,வாயாடியாக இருக்க வேண்டியதில்லை,சரியான நேரத்தில் சரியாக பேச தெரிந்தால் போதும்
வீட்டு பொருளாதா நிர்வாகம் கண்டிப்பாக தெரிய வேண்டும்,வரவு எட்டணா,செலவு பத்தணா என்று ஆகிவிடக்கூடாது
சமையலில் உங்களின் "signature dish" ஒன்று அவசியம் இருக்கட்டும்,முதல் முறையாக சாப்பிடும்போதே அசந்திடனும்
எல்லா காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட்டு பழகனும்,இது பிடிக்காது/ஒத்துக்காது சாக்கு போக்கு சொல்லக்கூடாது,பருவ மாற்றங்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்க வேண்டுமல்லவா!
அவசரநிலையை கையாள நிச்சயமாக தெரிந்து இருக்க வேண்டும்,திடீரென்ற உடல் நலக்குறைவு போல் சில. ஒரு பிரச்சினை என்று வந்து விட்டால்,பதறாமல் இருந்து,நிதானமாக இயல்பான நிலைக்கு திரும்ப பழக வேண்டும்
மாற்றத்தை பழக வேண்டும்,பெண்ணாக பிறந்து விட்டாலே உடலாலும் உள்ளத்தாலும் தொடர் மாற்றங்களை சந்திக்க நேரிடும்,அதற்கு தயாராக இருக்க வேண்டும்
உங்களுக்கு ஏற்ற ஆடைகளை அணிந்துகொள்ளவேண்டும்,புடவையும் கட்ட தெரியவேண்டும்
பண்டிகை காலங்களில் புதிய உடை, பலகாரங்கள், பூஜை என்று இருந்தாலும் கண்ணுக்கு மையும், கையில் மருதாணியும் மேலும் அழகூட்டும்
புதிய நட்பு/உறவுகளை உருவாக்க, தொடர தெரிய வேண்டும். சும்மா பார்த்த உடனே நட்பாகி, நாலே நாளில் முகத்தை திருப்பிக் கொள்ளக்கூடாது
நகைச்சுவை உணர்வு,கொஞ்சமாவது இருந்தால் நல்லது,தையல் என்று ஏதோவொரு கலை,மனம் சோர்வாக உணரும் போது நமக்கு நாமே புத்துணர்வு பெறலாம்