Tap to Read ➤

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை என்னென்ன?

வருமானம் இருந்தும் தங்கவில்லையே என்ற கவலை பலருக்கும் ஏற்படுவதுண்டு.
HTML Tamil
வருமானத்தில் இருந்து சிறிதளவு சேமித்து வைக்கலாம் என்று நினைத்தாலும் பலரும் சேமிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
வீட்டில் எப்போதும் செல்வம் பெருக, நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தினசரி எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம்.
தினமும் அதிகாலை நேரத்தில் குலதெய்வத்தை நம்பிக்கையுடன் வழிபட்டால் செல்வம் வீட்டில் தங்கும் என கூறப்படுகிறது.
வீட்டில் குத்துவிளக்கு ஏற்றும்போது, இரு திரிகள் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த பழக்கம், செல்வத்தை உங்களிடம் ஈர்த்துக் கொடுக்க உதவும்.
வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்றினால் லஷ்மி கடாட்சம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் போன்றவற்றை யாருக்கும் தராமல் இருப்பது நல்லது.
தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலித்தால், வீட்டில் லஷ்மி வாசம் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
பணம் வைக்கும் பர்ஸில் 2 புதின இலைகளை எப்போதும் வைத்திருந்தால் பணம் குறையாமல் இருக்கும் என்பது நம்பிக்கை.
யாருக்காவது பணம் கொடுக்கும் போது வாசற்படிக்கு வெளியே நின்று கொடுத்தால், உங்களின் அதிர்ஷ்டம் மற்றவர்களுக்கு சென்றுவிடும்.
வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமலும், அமங்கலச் சொற்களை பேசாமலும் இருந்தால், வீட்டில் செல்வம் வளம் தங்கும்.
வீட்டில் வெள்ளைப் புறக்காளை வளர்த்து வந்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும் என கூறப்படுகிறது.