Tap to Read ➤

தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகள் என்னென்ன?

தமிழர்களின் உணவு வகைகளில் அரிசியே முக்கிய இடம் வகிக்கிறது.
HTML Tamil
நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய அரிசி வகைகள், அவர்களின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருந்து வந்தது.
உணவு வகையில் முக்கிய இடம்பிடித்துள்ள அரிசியில், தமிழக மக்கள் புழுங்கல் மற்றும் பச்சரிசியை அதிகம் பயன்படுத்துவார்கள்.
பாரம்பரியமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த அரிசி வகைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
மாப்பிள்ளை சம்பா

இளவயதினருக்கு தேவைப்படும் உயிர்ச்சத்து, புரதச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் திறன் உள்ளிட்டவை இந்த அரிசியில் உள்ளது.
கருப்பு கவுனி 

 ஆன்டி- ஆக்சிடன்ட்டுகள் மற்றும் நார் நார்ச்சத்து கொண்ட இந்த அரிசியை 'அரச உணவு', 'பேரரசர் உணவு' என அழைப்பது உண்டு.
பூங்கார் அரிசி

வெளிர் சிகப்பு நிறத்தில் இருக்கும் இந்த அரிசியில், மற்ற பாரம்பரிய அரிசியைக் காட்டிலும் அதிக தனிம சத்துக்கள் நிறைந்துள்ளன.
காட்டுயானம் அரிசி

 பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய இந்த அரிசியில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளன.
மூங்கில் அரிசி

 கோதுமை போன்று இருக்கும்  இந்த அரிசியில், வைட்டமின், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன,
கிச்சிலி சம்பா 

 நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட இந்த அரிசியை வைத்து, இந்திய அரிசி ஆராச்சிக் கழகம், பல அரிசி வகைகளை உருவாக்கியுள்ளது.
தூயமல்லி அரிசி

 கதிர் வரும் சமயத்தில் பார்ப்பதற்கு மல்லிகை மொட்டுபோல் இருக்கும் என்பதால், இந்த அரிசிக்கு இந்த பெயர் வந்தது. இது பூச்சிக்கொல்லி தேவையற்ற அரிசி வகையாகும்.
சீரகச் சம்பா 

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த அரிசி, சீரகம் போன்று இருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்தது.
கருடன் சம்பா 

 அனைத்து தரப்பினரும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் அரிசி வகைககளில் கருடன் சம்பா அரிசியும் ஒன்றாகும்.
குடவாழை அரிசி

 இது இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடிய நெற்பயிராகும். கடரேலாரப் பகுதிகளில் உள்ள நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.