Tap to Read ➤

தமிழர்களின் உணவுப் பழக்கத்தின் வகைகள் என்னென்ன?

உணவு விஷயத்தில் தமிழர்களின் ரசனையே தனிதான்.
HTML Tamil
பழங்காலத்திலிருந்தே தமிழர்கள் பல்வேறு வகையான உணவுப் பழக்கங்களைக் கொண்டிருந்தனர்.
இந்த உணவுப் பழக்கங்களில் நீங்கள் எந்த மாதிரியான உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அருந்துதல்

 மிகக் கொஞ்சாமாக சாப்பிடும் உணவு பழக்கம் இதுவாகும்.
உண்ணல்

பசி தீர சாப்பிடுவது, இந்த உணவு பழக்கம் ஆகும்.
உறிஞ்சுதல்

நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணும் பழக்கம் இதுவாகும்.
தின்றல்

உணவுப் பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடும் முறையாகும்.
துய்த்தல்

உணவுகளை ரசித்து மகிழ்ந்து உண்ணும் வகையாகும்.
நக்கல்

உணவுகளை நாக்கினால் துழாவி உட்கொள்ளும் பழக்கம்.
பருகல்

நீர் கலந்த பண்டத்தை மெதுவாக குடிக்கும் பழக்கம் இதுவாகும்.
மாந்தல்

கடுமையான பசியால் மடமடவென்று உட்கொள்ளும் பழக்கம்.
கடித்தல்

கடினமான உணவுப் பொருட்களை கடித்து மென்று உண்ணும் பழக்கம்.
விழுங்கல்

உணவை வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவதாகும்.
முழுங்கல்

உணவை முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்ணும் பழக்கம் இதுவாகும்.