Tap to Read ➤

மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகள் என்னென்ன?

சில எளிய வழிமுறைகளை பின்பற்றி மன அழுத்தத்தை குறைக்கலாம்.
HTML Tamil
நம்மை சுற்றி நிலவும் விரும்பதகாத நிகழ்வுகள் மற்றும் சமூக அமைப்புகள் மன அழுத்ததை உண்டாக்கிறது.
பதற்றம், எரிச்சல், களைப்பு, தூக்கமின்மை போன்றவை மன அழுத்தத்திற்கான அறிகுறிகளாகும்.
மன அழுத்தம் என்பது மனதளவில் மட்டுமின்றி உடல் அளவிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். அதற்கான வழிகளை தெரிந்து கொள்வோம்.
தினமும் 8 மணி நேரம் நன்றாக தூங்குவது நல்லது. உடலுக்கு சரியான ஓய்வு அளித்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட, சுவாச பயிற்சிகள், தியானம், நல்ல இசையை கேட்பது போன்றவற்றில் மனதை உட்படுத்தலாம்.
அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். உடலை வறட்சியின்றி வைத்திருப்பது மிகவும் நல்லது.
மன அழுத்ததை குறைக்க கிரீன் டீயை அருந்தலாம். இதிலுள்ள அமினோ அமிலம் மூளையை அமைதிப்படுத்தும் தன்மை கொண்டது.
காஃபி, டீ அதிகம் குடிப்பதை தவிர்க்கலாம். புகைப் பிடித்தல், மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
மன அழுத்ததை போக்குவதற்கு, நெருங்கிய நண்பர்களுடன் அதிகம் நேரம் உற்சாகமாக பேசி மகிழுங்கள்.
விடுமுறை நாட்களை சிறப்பாக செலவிடலாம். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சி அடைய செய்யலாம்