Tap to Read ➤

ஒவ்வொரு நாளும் என்னென்ன கசாயம் குடிக்கலாம்?

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கசாயம் குடிக்க பழகிக் கொள்வோம்.
HTML Tamil
ஞாயிற்றுக்கிழமை

 சுக்கு மல்லி காபி குடிக்கலாம். இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
திங்கட்கிழமை

வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி கொதிக்க வைத்து குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராதாம்.
செவ்வாய்க்கிழமை

 கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராகுமாம்
புதன்கிழமை

தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராதாம்
வியாழகிழமை

 சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து, ஒரு தேக்கரண்டி பொடி பனங்கற்கண்டுடன் கொதிக்க வைத்து குடித்தால் ஜீரணமாகி வயிற்றுக் கோளாறுகள் தீருமாம்
வெள்ளிக்கிழமை

 வெந்தயம், தனியா சமஅளவு வறுத்து பொடிசெய்து, ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடுமாம்
சனிக்கிழமை

 முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்குமாம்