Varalakshmi N       Oct 26, 2024

உடலில் அதிக வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள், சமாளிக்க     என்னென்ன செய்யலாம்?

உடலின் வெளிப்புற மற்றும் உட்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது,     சாதாரணமாக 37 ° C பாதுகாப்பான வெப்பநிலை அளவைத்  தாண்டும்போது பல ஆரோக்கிய பிரச்சனைகள் உண்டாகும்

அதிக வெப்பம் உடலுக்கு ஆபத்தானது, இதனால் இதய ஆரோக்கியம், உடலில்     நீரிழப்பு, திசுக்கள் சேதமடைவது, மூளை மற்றும் நரம்புகளை பாதிப்பது,     நினைவாற்றல் குறைபாடு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன

அதிக வெப்பம் சருமத்தில் சொறி மற்றும் சிவப்பு நிறமாக மாற்றும் ஒரு     கடுமையான தோல் எரிச்சல் போன்றவை உண்டாகும்

வலிமிகுந்த தசை பிடிப்பு, மற்றும் வெப்பமான சூழலில் அதிக     உடற்பயிற்சியின் போது ஏற்படும்

மன அழுத்தம், மயக்கம், தலைசுற்றல் போன்றவை ஏற்படும்

அதிக வெப்பத்தால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகளை சமாளிக்கவும், உடல் சூட்டை குறைக்கும் வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும்

குளிர்ந்த திரவங்களை குடிப்பது, குளிர்ந்த காற்று வீசும் இடத்தில்     இருப்பது, இறுக்கமான ஆடைகளை அணியாமல் இருக்க வேண்டும்

உடலின் முக்கிய இடங்களான மணிக்கட்டு, கழுத்து, மார்பு போன்ற இடங்களை குளிர்விப்பதும், குளிர்ச்சியான பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதால் உடல் சூட்டை விரைவில் குறைக்க உதவும்