Varalakshmi N       Feb 12, 2025

திரிபலா பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் தீரும்?

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலந்து செய்யப்படும் 'திரிபலா பொடி'  ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது

நெல்லிக்காய் வற்றல் 100 கிராம், கடுக்காய் மற்றும் தான்றிக்காய்  இவைகளையும் 100 கிராம்கள் எடுத்து, மூன்றையும் உரலில் மைய இடித்து, நன்கு  சலித்து எடுத்து, கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்

திரிபலா பொடியை காலை, மாலை என இருவேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் தீரும்

பற்களுக்கு பலம் ஏற்படும், தொண்டை புண் ஆறும், குரல் இனிமை பெறும்

குடல் புண்கள் ஆறும், அஜீரண கோளாறுகள் நீங்கும்

பித்த சம்பந்தமான நோய்கள் குணமாகும்

இருமல் மற்றும் நாள்பட்ட மலச்சிக்கல் தீரும்