மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்பதை நாம் அறிவோம், ஆனால் ரெட் ஒயின் ஒரு நன்மை பயக்கும் மதுபானம் ஆகும். அதற்காக பருக சொல்லி யாருக்கும் பரிந்துரைக்கவில்லை.
ஒயிட் ஒயினை விட ரெட் ஒயினில் 10 சதவீதம் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இதில் உள்ள பாலிஃபீனால் என்ற வேதிப்பொருள் ஹார்மோன் செயல்பாட்டை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் பிரச்சனை, முடி உதிர்தல், சரும பிரச்சனை போன்ற பிரச்சனைகளை எளிதில் தீர்க்க முடியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் ஒயின் குடிக்கும் பெண்களுக்கு ஹார்மோன் சுழற்சி சீராகவும், இயல்பாகவும் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் ரெட் ஒயினில் இருக்கக்கூடிய வேதிப்பொருட்களில், அல்சீமர் நோய்க்கு எதிரான பாதுகாப்புதன்மையும் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
ரெட் ஒயின் குடிப்பவர்களுக்கு உடல் எடைக்கு ஏற்ற சரியான உயரம் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனால் சிவப்பு ஒயினை அளவோடு பருகுவது ஆரோக்கியமானது.
அளவாக ஒயின் பருகுவது இதய நோய் அபாயத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே ஒயின் குடித்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதல்ல, ஆரோக்கியத்தை அதிகரிக்க பல வழிகள் உள்ளன.