பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக போக்ஸோ சட்டம் என்ன சொல்கிறது?
The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012
Sidhanathan K
இந்தியாவில் குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, சித்ரவதை, ஆபாச படம் எடுத்தல் போன்ற குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
2016 இணையதளக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 99.1% பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்படுகின்றன.
உறவினர்கள், ஆசிரியர்கள், தெரிந்தவர்கள் மற்றும் அந்நியர்களால் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பது வேதனையான உண்மை.
இத்தகைய குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் போக்சோ சட்டம், 2012 ஐ அறிமுகப்படுத்தியது.
குற்றம் நடந்த 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் இந்த வழக்கை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என்று சட்டம் குறிப்பிடுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உடந்தையாக இருந்தாலும் குற்றமே மற்றும் குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும்.
போக்சோ சட்டத்தில் 9 பகுதிகள் மற்றும் 46 பிரிவுகள் உள்ளன.
குழந்தைகள் மீது நாளுக்கு நாள் பாலியல் வன்முறை நிகழ்வது அதிகரித்து வந்த நிலையில் போக்சோ (2012) சட்டம் ஜூலை 18, 2019-இல் திருத்தம் செய்யப்பட்டது.
இச்சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாகவும், 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாகவும், 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகள் வரை நீட்டித்து திருத்தம் செய்யப்பட்டது.
மேலும் தேவைப்பட்டால் மரண தண்டனை வரை வழங்கவும் வழிவகை செய்துள்ளது.
போக்சோ சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்ட 2012 முதல் இது நாள் வரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பது வருத்தமளிக்கிறது.