Tap to Read ➤

டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பெண்களுக்கு ரயில்வே சட்டம் கூறுவது என்ன?

டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பெண் பயணியை ஏன் ரயிலிலிருந்து கீழே இறக்கிவிட முடியாது?
Sidhanathan K
கூட்ட நெரிசலின் காரணமாகவோ அல்லது அவசரத்தின் கட்டாயத்தினாலோ ஒரு பெண் பயணச்சீட்டு எடுக்காமல் ரயிலில் பயணிக்க நேரிடும்.
அவ்வாறு இரவில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்கு, இரயில்வேச் சட்டம் (1989) பிரிவு 139 என்ன சொல்கிறது தெரியுமா ?
இரவில் ஆண் துணை இல்லாமல் தனியே பயணிக்கும் பெண் பயணியிடம் டிக்கெட் இல்லை என்றால், டிக்கெட் பரிசோதகர் அவரை எந்த நிலையத்திலும் இறக்கிவிட முடியாது என்பதாகும்.
இந்த முறை பகல் நேரங்களில் பின்பற்றப்படாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
தனியாக பயணிக்கும் பெண் பயணி, ரயில் நிலையத்திலோ அல்லது சந்திப்பிலோ ரயிலில் இருந்து இறங்கினால் அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அவரை ரயிலில் இருந்து இறக்கி விடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த விதி கொண்டு வரப்பட்டது.
முதலில் டிக்கெட் பரிசோதகர் இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பின்னர் அந்தப் பெண் அதே இரயிலில் தொடர்ந்தோ அல்லது அடுத்த ரயிலில் செல்லும் வகையிலோ பத்திரமாக டிக்கெட் எடுத்து கொடுத்து அதில் அமர வைக்க வேண்டும் (பயணியிடம் பணம் வசூலித்துதான்). அதுவும் ரயில்வே அதிகாரியின் பொறுப்பு.
பின்னர் அதே ரயிலிலோ அல்லது அடுத்த ரயிலிலோ செல்லும் வகையில் பத்திரமாக டிக்கெட் எடுத்து (அப்பயணியிடம் கட்டணம் வசூலித்து) கொடுத்து அதில் அமர வைப்பதும் அந்த ரயில்வே அதிகாரியின் பொறுப்பாகும்.
ஆனால் ஒரு வேளை ரயிலில் உடன்வரும் பெண் ரயில்வே கான்ஸ்டபள் யாராவது அடுத்த நிலையத்தில் இறங்கினால் அவருடன் இறக்கிவிடுவதற்கும் இந்த சட்ட விதியில் வழியிருக்கிறது.
இரயில்வேச் சட்டம் பிரிவு 162 விதியின் படி, 12 வயதுக்குட்பட்ட ஆண் சிறுவர்கள் மட்டுமே பெண்களுக்கான தனி பெட்டியில் பயணம் செய்ய முடியும்.