Tap to Read ➤

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுகள் என்னென்ன?

உணவு கட்டுப்பாட்டால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும்.
HTML Tamil
முறையற்ற உணவு பழக்கத்தால் கொழுப்புகள் உடலில் தங்கி, ரத்தக் குழாய்களில் படிந்துவிடும். இது, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
என்னென்ன உணவுகளை உட்கொண்டால், கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆப்பிள்

வைட்டமின் சி மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்துள்ள ஆப்பிளை தினமும் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
பார்லி

 உடல் பருமனமானவர்கள், தினமும் காலை உணவாக பார்லியை பயன்படுத்தினால், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பு தடுக்கப்படும்.
ஓட்ஸ்

ஓட்ஸை தினமும் காலை உணவாக சமைத்து சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பைக் குறைக்கலாம்.
நட்ஸ்

 நட்ஸில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருப்பதால், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.
கத்தரிக்காய்

கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் கத்தரிக்காயில், நார்ச்சத்து அதிகம் இருப்பதால், கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும்.
மீன்

 வஞ்சிரம், மத்தி உள்ளிட்ட மீன் வகைகளை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதை தவிர்க்கலாம்.
டீ

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமுள்ளள டீயை, காலையில் பால் சேர்க்காமல் குடித்து வந்தால், கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கலாம்.
வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள குவர்சிட்டின் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட், ரத்தக் குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மை கொண்டது.
முழு தானியங்கள்

50 வயதுக்கும் மேற்பட்டவர்கள், கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைக்க, தினமும் தினை, கேழ்வரகு போன்றவற்றை சமைத்து உட்கொள்ளலாம்.
பசலைக் கீரை

நார்ச் சத்துள்ள பசலைக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். இது இதய ரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது.
பூண்டு

நோயை எதிர்க்கும் சக்திகொண்ட பூண்டை, தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக குறையும்.
வெண்டைக்காய்

நார்ச்சத்து மற்றும் கலோரிகள் உள்ள வெண்டைக்காய், உடல் எடையை குறைக்க உதவும். கொலஸ்ட்ரால் அளவும் கட்டுக்குள் இருக்க வைக்கும்.
தேன்

தினமும் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டு வரலாம். தேனிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.