Tap to Read ➤

மீன் எண்ணெய் மாத்திரை என்றால் என்ன? எப்படி தயாரிக்கப்படுகிறது?

இதயத்தை காக்கும் மீன் எண்ணெய்,மேலும் மீன் எண்ணெய் மாத்திரையின் பயன்கள்!
varalakshmi n
வடக்கு ஐரோப்பா  மக்கள்,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்,குளிரைத் தாங்கிக்கொள்ளவும் மீன் எண்ணெயைப் பயன்படுத்தினர்
இன்று எளிதாகக் கிடைக்கின்றன மீன் எண்ணெய் மாத்திரைகள் பெரியவர்,சிறியவர் என அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர்
உடலுக்கு மிகவும் அவசியமான பல வகைச் சத்துக்கள், திமிங்கலம் போன்ற மிகப்பெரிய மீன்களில் இருக்கின்றன
மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், பல கட்ட சுத்திகரிப்புக்குப் பிறகு, கேப்ஸ்யூல்களில் மாற்றப்பட்டு விற்கப்படுகின்றன
‘காட் லிவர் ஆயில்’ (Cod liver oil) என்ற பெயரில் மீன் எண்ணெய் மாத்திரைகள் அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்
இதய நோய், மூட்டு வலி போன்ற பிரச்னை கொண்டவர்களுக்கு உணவோடு கூடிய சத்து மாத்திரையாகப் பரிந்துரைக்கபடுகிறது
சிறுநீரகப் பிரச்னை, கர்ப்பிணிகள்,குழந்தைகள் இதை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படலாம்,எனவே மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது
மூட்டு வலி, மறதி,கண் நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு இதயத்துக்குப் பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்,மாரடைப்பு ஏற்பட்டவர்களும் மீன் எண்ணெயால் பயன் தரும்
இதய ரத்தக் குழாய்களில் மாறுதல் ஏற்படுத்தும் டிரைகிளிசரைட்ஸ், மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்
சருமப் பாதுகாப்புக்கும் மீன் எண்ணெய் முக்கியமானது,காயங்களை விரைவில் ஆற்றும்
மனநிலை பாதிப்பு உளவியல்ரீதியான பிரச்னை உள்ளவர்கள்,இதில் உள்ள சத்துக்கள் பக்கவிளைவுகள் இல்லாமல் நல்ல நிவாரணம் பெறலாம்