Tap to Read ➤

புதை மணல் என்பது என்ன?இதில் மாட்டிக்கொண்டால் உயிரிழப்பு ஏற்படுமா?

புதைகுழியில் (சொரிமணல்) சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?
varalakshmi n
சொரிமணல் அல்லது புதைமணல் என்பது கூழ் நிலையில் உள்ள நீரேறிய களிப்பொருள்,களிமண்,உப்புநீர் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்
நிலத்தின் கீழ் உருவாகும் நீரோட்டம், பொருத்தமான அளவில் மணல் மற்றும் பிற பொருட்களின் கலவையைக் கொண்ட இடங்களில் குவியக்கூடும்
இம்மணற் பகுதி பார்வைக்குத் திடப்பொருளாகக் காட்சியளிக்கும்
சூழ்வுள்ள நிலப் பகுதிக்கும் இதற்கும் வேறுபாடு காண்பது கடினம்,இதன்மீது யாராவது நடக்க முயலும்போது மணலுள் புதைய நேரிடுகின்றது
கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடித்துவிடும் புதைகுழி ,ஆற்றுப் படுகைக்கு, சில கடற்கரைக்கு அருகில் வசிப்பவர்கள் இதைப் பார்த்திருக்க முடியும்
இதை quicksand என்கிறார்கள்,இதில் மாட்டிக்கொண்டால் யாரும் மூழ்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை
கெட்டியான பொருள் என்பதால் புதைமணலில் மனிதர்கள் இடுப்பு வரை மட்டுமே மூழ்க முடியும்
புதைமணலில் மீது யாராவது விழுந்துவிட்டால் அடியில் இருக்கும் நல்ல மணல், களிமண் மற்றும் உப்புத்தண்ணீர் கெட்டியாக மாறிவிடும்
புதைமணலில் சிக்கிக்கொண்டவரை வெளியே இருப்பவர்கள் கைப்பிடித்து தூக்குவது கூடாது அதுதான் காயத்துக்கு உள்ளாக்கும்
அதற்குப் பதிலாக, புதைமணலில் சிக்கிக்கொண்டவர் தனது காலை நகர்த்த வேண்டும். சைக்கிள் ஓட்டுவது போல கால்கள் இரண்டையும் அசைக்க வேண்டும்
கால்களை அசைப்பதால் அந்த இடத்தில் சுற்றியிருக்கும் கெட்டியான மணல் கெட்டித்தன்மை இழக்கும்
கால்பகுதியில் கெட்டித்தன்மை குறைந்ததும் மெதுவாக முதுகை புதைமணலில் மேல் சாய்க்க வேண்டும்அந்தப் பகுதியில் இதனால் அழுத்தம் அதிகரிக்கும்
பின்பக்கமாக அசைத்து நீச்சலடிக்க வேண்டும் backstroke என்பார்களே,மெல்ல புதைமணலில் மாட்டிக்கொண்ட கால்கள் வெளியே வரும்
புதைமணலில் விட்டு, நல்ல மணற்பரப்புக்கு வந்ததும் எழுந்து விடாமல், படுத்தபடியே நகரவும்,முழுவதுமாக திடப்பகுதிக்கு வந்தவுடன் எழுந்திருக்கலாம்