Sidhanathan K       May 29, 2024

இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவதற்கும் குடலிறக்கத்திற்கும் என்ன தொடர்பு..?

உடலின் உள்ளுறுப்புகள் பலவீனமான தசைப்பகுதியை வெளியே தள்ளுவதால் ஏற்படுவதை தான் ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்கின்றனர்.

உடலுழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும், அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும், அதிக எடை தூக்குபவருக்கும் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மூச்சுவிடும்போது, மலம் கழிக்கும்போது சிறிய அளவில் இருந்த பிதுக்கம் பெரியதாக மாறும். சிலருக்கு மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

ஹெர்னியாவை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது. ஆனால் அதை கவனிக்காமல் விட்டால், சில நேரங்களில் குடல் வயிற்றுக்குள் முறுக்கிக் கொண்டு, வெடிக்கும் நிலைக்குச் செல்லும். அதேபோல், கடுமையான வலி எடுக்கும்.

குடலிறக்க வலி குறைய வேண்டுமென்றால், முதலில் அதிக காரமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல், அமில உணவுகள், கடினமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

அதிமதுர பொடியை, பாலில் கலந்து வாரம் 2 முறை குடித்துவந்தாலே குடலிறக்கம் கட்டுப்படும் என்கின்றனர்.

அதிக வெப்பம் நம்மை நேரடியாகவே தாக்கும் என்பதால், பிறக்கும் குழந்தைகளில் தொடங்கி வாலிப வயதினர்கள் வரையில் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் இன்றளவும் உள்ளது.

கறுப்பு வெப்பத்தை உறிஞ்சி உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் என்பதால், சிவப்பு நிற அரைஞாண் கயிறு கட்டுவது மிகவும் சிறந்ததாக கூறப்படுகிறது.

ஆண்களில், சிறுநீரகத்திலிருந்து வரும் இரத்த நாளங்களும், விதைப்பையில் இருந்து வரும் இரத்தக்குழாய்களும் அடிவயிற்றில் சந்திக்கின்றன.

இந்த அரைஞாண் கயிற்றை, இடுப்பை சுற்றி கட்டுவதால், மேல்வயிற்று பகுதியிலுள்ள குடல் கீழே இறங்காமல் இருக்குமாம். அதாவது குடலிறக்கம் ஏற்படாமல் இருக்கும்.

அந்தவகையில், விதைப்பையை பாதுகாக்கவும், வயிற்றின் உள்உறுப்புகள் பலவீனமான தசைப்பகுதியை வெளியே தள்ளுவதை (குடலிறக்கம்) தடுக்கவும், இந்த அரைஞாண்கயிறுகளை கட்டி வருகிறோம்.

அதேபோல, இடுப்புப்பகுதியில் அரைஞாண் கயிறு காட்டுவதால், சிறுநீர்ப்பை, மலப்பைகளுக்கு ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories