பல்லி உடலின் எந்த பகுதியில் விழுகிறது என்பதை பொறுத்து பலன்களை முன்னோர்கள் கூறியுள்ளனர்.
பல்லி மூலம் மனிதர்களுக்கு நல்ல சகுனங்களையும், தீய சகுனங்களையும் தெரிவிக்க கடவுளால் அனுப்பப்பட்ட உயிரினம் என்று புராணங்கள் கூட கூறுகின்றன.
தலையில் பல்லி விழுந்தால், மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன அமைதி இழப்பு, அன்புக்குரியவர்களின் மரணம் போன்ற கெட்ட சகுனத்தை குறிக்கிறது.
பல்லி தலையில் படாமல் தலை முடியில் பட்டு விழுந்தால் ஏதோ ஒரு வகையில் நன்மை நிகழும் என்பது நம்பிக்கை.
நெற்றியில் இடது பக்கம் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்ஷ்மி கடாசம் ஏற்படும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் வரும். வலது பக்கம் பல்லி விழுந்தால் சந்தோஷம்.
மூக்கின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை அதிகரிக்கும். மூக்கின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய்கள் வரும்.
காதில் இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம். வலது காதில் பல்லி விழுந்தால் ஆயுள் பெருகும்.
முகத்தில் பல்லி விழுந்தால், உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று அர்த்தம். புருவத்தில் பல்லி விழுந்தால் உயர்பதவியில் உள்ளவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.
கழுத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை ஏற்படும்.
தோள்பட்டையின் இடது அல்லது வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் வெற்றி கிட்டும்.
வலது மார்பில் பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கும். இடது மார்பில் பல்லி விழுந்தால் சந்தோஷம் கிடைக்கும்.
தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினம் போன்ற மிகவும் விலை மதிப்புமிக்க பொருட்களை வாங்க வாய்ப்பு உள்ளது.
உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அந்த நாள் முழுவதும் நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்போம் என்பது நம்பிக்கை.
உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.
பாதத்தில் பல்லி விழுந்தால், விரைவில் வெளிநாடு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று அர்த்தம்.
பல்லி நம் உடலின் எந்த பகுதியில் விழுந்தாலும் உடனே பயப்பட வேண்டாம். முதலில் நன்றாக குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.