Sidhanathan K       Mar 27, 2023

நாம் பயன்படுத்தும் சோப்பில் பி.ஹெச்-இன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

பொதுவாக சருமத்தில் உள்ள அழுக்கை அகற்ற சோப்பை பயன்படுத்துகிறோம்.

சோப்பு வாங்கும் போது சோப்பில் இருக்கும் டி.எஃப்.எம், பிஹெச் அளவு, கலந்திருக்கும் ரசாயனங்கள் மற்றும் மூலப்பொருள்கள் என பார்த்து வாங்க வேண்டும்.

பிஹெச் என்பது சோப்பில் இருக்கும் ஹைட்ரஜன் சமநிலையை குறிப்பதாகும்.

பிஹெச் அளவு (power of Hydrogen) என்பது 0 முதல் 14 வரை இருக்கும்.

சோப்பின் pH அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பிறந்த குழந்தைக்கு pH 7 வரையிலும், மற்றவர்களுக்கு pH 4.5 முதல் 5.5 என்ற அளவிலும் இருப்பது சரியானது.

சோப்பின் பிஹெச் அளவு பெரும்பாலும் 7-9 என்ற அளவில் இருக்கிறது.

குறைந்த அளவு அமிலத்தன்மை கொண்டதாகவும், அதிக அளவு காரத்தன்மை கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பிஹெச் 7-9 கொண்ட சோப்பை, ஐந்து நிமிடங்கள் வரை சருமத்தில் பூசி கழுவினால், மீண்டும் சருமம் பழைய நிலைக்கு மாற இரண்டு மணி நேரமாகும்.

பிஹெச் 5.5 என்ற அளவில் சருமத்தின் பிஹெச்-க்கு சமநிலையில் இருக்கும் சோப்பை பயன்படுத்தலாம்.

இந்த வகை சோப், சருமத்தில் உள்ள கிருமிகளை அகற்றும். எரிச்சல் தன்மையை குறைக்கும். ஈரப்பசையை நீண்ட நேரம் தக்கவைக்க உதவும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories