Tap to Read ➤

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?

அரிசி மாக்கோலம் நம்முடைய தாராள குணத்தை வெளிப்படுத்துகிறது.
HTML Tamil
வீட்டு வாசலில் கோலம் போடுவதால் அஷ்டலட்சுமிகளும், தேவர்களும் வீட்டிற்கு வாசம் செய்வார்கள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
தமிழர்களின் வாழ்க்கை முறையில், கோலம் மங்களச் சின்னமாக கருதப்படுகிறது. அரிசி மாவில் கோலமிடுதே தமிழக மரபு வழியாக உள்ளது.
வீட்டு வாசலில் அரிசி மாவால் கோலமிடுவதன் தத்துவங்களையும், அதன் பயன்களையும் தெரிந்துகொள்வோம்.
தானத்தில் சிறந்தது அன்னதானமாகும். இதனால் அந்தக் காலத்தில் வசதி படைத்தவர்கள் 1000 பேருக்கு அன்னதானம் செய்து புண்ணியத்தை தேடிக்கொண்டனர்.
ஏழை மக்களும் இதுபோன்று ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்ய, நம் முன்னோர்கள் வழிவகைகளை சொல்லி வைத்தார்கள்
அதன்படி, ஏழை மக்கள், தங்கள் வீட்டு வாசல் முன்பாக பச்சரிசி மாவில் கோலமிட்டு, ஆயிரக்கணக்கான எறும்புகளின் பசியை போக்கினர்.
எறும்புகள் அரிசி மாவை உண்ட பின்பு, மீதமிருக்கும் மாவையும் தங்கள் வலைகளில் சேமித்து வைக்க சாரை சாரையாக எடுத்துச் செல்லும்.
இதனால் ஆயிரக்கணக்கான எறும்புகளுக்கு உணவளித்த மகிழ்ச்சியையும், புண்ணியத்தையும் ஏழை மக்கள் பெற்று வந்தனர்.
வீட்டு வாசலில் போடப்படும் அழகான கோலங்கள், பார்ப்பவர்களின் மனதை கவரும் வசீகர தன்மை கொண்டது.
நம் வீட்டிற்கு யாராவது தகராறு செய்யும் நோக்கத்துடன் வந்தால், வாசலில் உள்ள அழகிய கோலங்கள், அவர்களின் எண்ணத்தை சிதறடிக்கிறது.
சண்டையிட வருபவர்களின் கோபத்தை தணிக்கும் மனோவசிய சக்தி, வீட்டு வாசலில் போடப்படும் அழகிய கோலங்களுக்கு உண்டு.
இதனை அறிந்துதான் நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் அரிசி மாவு மூலம் கோலம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
வீட்டு வாசலில் ஸ்டிக்கர் மற்றும் ரசாயன பொருட்களால் கோலமிடுவதை தவிர்த்து, அரிசி மாவில் கோலமிட்டு புண்ணியத்தை தேடிக்கொள்வோம்.