Tap to Read ➤

பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவதும், முட்டை வைப்பதற்குமான காரணம் என்ன ?

நம் முன்னோர்களின் தந்திரம் !!
Sidhanathan K
கோவில்களிலும் வயல்களிலும் பாம்பு புற்று இருப்பதை பார்த்திருக்கிறோம். அதனருகில் பால், முட்டை வைப்பதையும் பார்த்திருக்கிறோம்.
பாம்பிற்கு முட்டையும் பாலும் மிகவும் பிடித்த உணவு அதனால் வைக்கிறார்கள் என நாம நினைப்பது தவறு.
உண்மை என்னவெனில் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கபட்டுள்ளது.
பண்டைய காலங்களில் மனிதர்களின் வசிப்பிடங்கள் பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியும், காடுகளை ஒட்டியும் இருந்தன.
அடர்ந்த காடுகளில் மனிதர்களை விட பாம்புகளின் எண்ணிக்கை அதிகம். ஏனெனில் பாம்புகளின் இனப்பெருக்கம் மனிதர்களை விட அதிகமாக இருந்தது.
இந்துக்கள் பாம்பை கடவுளாக வணங்கியதால், பாம்புகளை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்தனர்.
பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகரும் ஆண் பாம்பு இனப்பெருக்கத்துக்காக பெண் பாம்பை தேடி வரும்.
பால் மற்றும் முட்டைகளில் இருந்து வெளிப்படும் ஒரு குறிப்பிட்ட வாசனையானது பெண் பாம்பிலிருந்து வெளிவரும் வாசனையை தடுக்கிறது.
இப்படியாக பாம்புகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தினார்கள்.
இதனால் தான் பாம்புக்கு பால் மற்றும் முட்டைகள் வைக்கப்படுகின்றன. இதைத்தான் இன்று நாம் பின்பற்றுகிறோம்.