Tap to Read ➤

காலையில் கண் விழித்ததும் எதை பார்க்க வேண்டும்?

தூங்கி எழும்போது நாம் பார்க்கும் முதல் விஷயம் நல்லதாக அமைய வேண்டும்.
HTML Tamil
தினமும் காலையில் எழுந்ததும் இன்றைய தினம் நல்ல நாளாகவும், மகிழ்ச்சியான நாளாகவும் அமைய வேண்டும் என நாம் எண்ணுகிறோம்.
தூக்கத்திலிருந்து கண் விழிக்கும்போது சிலவற்றை பார்த்தால், அதிர்ஷ்டமாக அமையும் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
காலையில் எழுந்ததும் முதலில் நம் உள்ளங்கையை கண்விழித்து பார்த்தால் அன்றைய நாள் மங்களகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
காலையில் தூங்கி எழுந்ததும் மற்றவர்களை பார்ப்பதைவிட, நம் முகத்தையே கண்ணாடியில் பார்ப்பது சிறப்பானதாகும்.
காலையில் தூங்கி எழுந்ததும், முதலில் சூரியனை கண் திறந்த பார்த்து, சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பானது என கூறப்படுகிறது.
காலையில் எழுந்ததும் தெய்வப் படங்களையும், விக்கிரகங்களையும் பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டத்தையும், நல்ல சிந்தனைகளையும் உண்டாக்கும்.
கோயில் ராஜகோபுரம், சிவலிங்கம், பசுமாடு, பூந்தோட்டம் ஆகியவற்றையும் காலையில் கண்விழித்ததும் பார்ப்பது சிறப்பானது.
நம்மிடம் பாசமாக இருக்கும் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோரின் முகத்தில் விழிப்பதும் நல்லது என கூறுகிறார்கள்.
தாமரைப்பூ, கடல் மற்றும் அழகான இயற்கை காட்சிகளையும் காலையில் கண் விழித்ததும் பார்த்தால், மனம் உற்சாகமடைந்து, அன்றைய தினம் சிறப்பாக மாறும்.
மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி உள்ளிட்ட மங்களகரமான பொருட்களையும் தூங்கி எழுந்தும் பார்ப்பது நல்லது என சொல்லப்படுகிறது.