Tap to Read ➤

குட்டி தூக்கம்!

மதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவது ஏன்?
varalakshmi n
நமது உடலின் Circadian rhythm-(சிற்கதயன் ரிதம்) களில் ஏற்படும் மாறுதல்கள் இதற்கு காரணமாகிறது.
மதிய உணவுக்கு பிறகு இன்சுலின் அளவு உடலில் உயர்வதால் அது மெலடோனின் என்கிற ஹார்மோன் சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒருவித மயக்க நிலை ஏற்படும்.
மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளும் பழக்கங்கள் காரணமாக இது அமைகிறது.
முழு தானிய வகைகளை சாப்பிடலாம்
காலை மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பயிறு வகைகள், பழங்கள், முந்திரி, பாதாம் போன்றவற்றை உட்கொள்வதன் மூலமாக சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தலாம்.
எண்டார்ஃபின் ( ஹாப்பி ) ஹார்மோன் அளவு குறைந்தால் இயற்கையாகவே உடலில் சோர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.
இரவில் சரி வர தூக்கம் இல்லாமல் இருப்பதும் மதிய உணவு உண்டபின் வரும் தூக்கத்திற்கு காரணமாகிறது. இதைத் தவிர்க்க வெளியில் சென்று வெயில் உடலில் படும்படி நடப்பதால் வைட்டமின் டி-யை அதிகரிக்கச் செய்து, மெலடோனின் அளவைக் குறைக்கிறது.
உணவுக்குப் பின் ,இனிப்பு மற்றும் குளிர்பானங்கள் எடுத்து கொள்வதால், வளர்சிதை மாற்றங்கள் என்று சொல்கிற டயாபடீஸ், பிப், ஒபிசிட்டி, போன்ற நிலைகளை பாதிக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
தேவையான தூக்கம், அளவான உடற்பயிற்சி, சரிவிகித உணவுப்பழக்கம், உணவை மென்று உண்ணுதல் போன்றவை நமது மதிய தூக்கத்தைப் போக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வழிவகுக்கும்.