Sidhanathan K       Apr 22, 2025

மருந்து அட்டையில் Rx என்ற குறியீடு குறிக்கப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?

மருந்து அல்லது மாத்திரை அட்டைகளில் பெயருக்கு மேலே Rx என்ற குறியீடு இருக்கும். அவ்வாறு மாத்திரைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மருத்துவர் எழுதித்தந்த மருந்து சீட்டை (Prescription) மருந்தகத்தில் காட்டினால் மட்டுமே இந்த Rx மருந்துகள் குடுக்கப்படும்.

அதேபோல, இந்த Rx மாத்திரைகள் மற்றும் மருந்துகளை மறுமுறை மருத்துவரிடம் செல்லாமல் மருந்தகத்தில் மீண்டும் வாங்கி பயன்படுத்தலாம்.

இந்த Rx குறியீட்டில் NRx மற்றும் XR என இரண்டு வகையான மருந்துகள் உள்ளன. NRx லேசான தூண்டுதல் மருந்தாகவும் (Drugs), XRx கள் அதிக தூண்டுதல் மருந்தாகவும் (Drugs) வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த NRx வகை மருந்துகள் Narcotic Drugs என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த NRx மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை (prescription) இல்லாமல் வாங்க முடியாது. குறிப்பாக, அந்த மருந்துச் சீட்டு 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

அதாவது, 6 மாதம் கழித்து மருத்துவர் எழுதிக் குடுத்த அந்த NRx வகை மருந்துகளை மருந்தகங்களில் நம்மால் வாங்க முடியாது.

மருந்தகங்களில் பொதுவாக H மற்றும் H1 என வகைப்படுத்தப்படும் இந்த NRx வகை மருந்துகளை, மனச்சோர்வு, மனநோய் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதேபோல, XRx வகை மருந்துகளை Narcotic and psychotropic substance based drugs என்று கூறுகின்றனர். இந்த மருந்துகள் அனைத்தும் அதிக பலம் வாய்ந்த வலி நிவாரணி மற்றும் மயக்கமூட்டிகளாக பயன்படுகிறது.

இந்த மருந்துகள் பொதுவாக மனநல மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

இந்த வகை மருந்து சீட்டை பரிந்துரைக்கப்பட்ட அந்த நாளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.