Sidhanathan K       Oct 30, 2024

பூஜை அறையில் சாமி படம் கீழே விழுந்து உடைந்து விட்டால் என்ன செய்வது..?

கண்ணாடி உடைந்தால் வீட்டுக்கு ஆகாது, குங்குமம் தவறினால் கணவருக்கு பிரச்சனை போன்ற நம்பிக்கைகளை சிறு வயதில் இருந்தே நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். 

அதேபோல் பூஜை அறையில் சாமி படங்கள் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உடைந்தால் வீட்டில் உள்ளவர்கள் பதற்றம் அடைய வேண்டாம்.

சாமி படம் கீழே விழுந்து உடைந்ததற்கு என்ன காரணமாக இருக்குமோ என்று எதிர்மறையாக சிந்தித்து மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

முதலில் உடைந்த சாமி படத்திலிருந்து கண்ணாடியை கவனமாக அகற்றவும். பின்னர் படத்திற்கு மேலே உள்ள சட்டத்தை கவனமாக அகற்றி ஒரு துணியில் சுற்றி குப்பையில் போட்டு விடவும்.

இப்போது காகிதத்தில் பதிக்கப்பட்ட சாமி உருவபடம் மட்டும் மீதம் இருக்கும்.

சுத்தமான பக்கெட்டில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூளைக் கரைத்து அதில் சாமி படம் அச்சிடப்பட்ட பேப்பரை ஊற வைத்து நன்றாக கை வைத்து கரைத்தால், அனைத்தும் தண்ணீரில் கரைந்துவிடும்.

இந்த தண்ணீரை செடி கொடிகள் இருக்கும் இடத்தில் ஊற்றி விடலாம். இதே முறையை பின்பற்றி தான் செல்லரித்த நீண்ட நாள் பயன்படுத்தாத சாமி படங்களையும் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

பின்னர் மனநிம்மதிக்காக குடும்பத்துடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமிக்கு ஒரு அர்ச்சனை செய்து தேங்காய் உடைத்துவிட்டு வரலாம்.