Tap to Read ➤

சாலை விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஒருவரின் உயிரை எப்படி பாதுகாக்கலாம்?
Sidhanathan K
108க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் கேட்கவும். 100ஐ அழைத்து விபத்து நடந்த இடத்தை காவல்துறைக்கு தெரிவிக்கவும்
NHAI-இன் 24 மணி நேர கட்டணமில்லா எண்ணான 1033ஐத் தொடர்புகொண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளைப் புகாரளித்து, அதற்கேற்ப உடனடி உதவியை ஏற்பாடு செய்யலாம்.
விபத்துக்குள்ளானவரின் மொபைல் ஃபோனை எடுத்து, அதில் உள்ள எண்களின் அடிப்படையில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்கவும்.
விபத்துக்குள்ளானவரை சுற்றி காற்றோட்டத்தை ஏற்படுத்த சுற்றி இருப்பவர்களை முதலில் விலகி நிற்கச் செய்யவும்.
சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
விபத்துக்குள்ளானவர் ஹெல்மெட் அணிந்திருந்தால், பட்டைகளை அகற்றி ஹெல்மெட்டை அப்புறப்படுத்தவும்.
முதலுதவி பற்றி தெரிந்தால் மட்டுமே முதலுதவி செய்யுங்கள், இல்லையெனில் மருத்துவர்கள் அல்லது வேறு யாராவது வரும் வரை காத்திருப்பது நல்லது.
காயம்பட்ட இடத்தில் ரத்தக்கசிவை தடுக்க ஒரு சுத்தமான துணியை கொண்டு இறுக்கி கட்டவும்.
கால்களில் ரத்தம் கசிந்தால் கால்களை சற்று உயர்த்தி பிடிப்பதன் மூலமாக ரத்தக்கசிவை குறைக்கலாம்.
விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டால், சற்றும் யோசிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று மேல்சிகிச்சைக்கு அனுமதிப்பது நல்லது.