Tap to Read ➤

மெட்ராஸ் 'ஐ'  வந்து விட்டால்  என்ன செய்ய வேண்டும்?

மெட்ராஸ் 'ஐ' எளிதில் பரவும் கண் நோயாகும்.
HTML Tamil
அடினோ வைரஸ் என்ற கிருமியால், மெட்ராஸ் 'ஐ' என்ற கண் நோய் வருகிறது.
சென்னை எழும்பூர் பிராந்திய கண் மருத்துவமனையில் இந்த நோய் முதலில் கண்டறியப்பட்டதால், இதனை மெட்ராஸ் 'ஐ' என அழைக்கிறோம்.
மெட்ராஸ் 'ஐ' நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
மெட்ராஸ் 'ஐ' நோய் வந்தவர்கள், ஈராமான துணியை வைத்து துடைத்து, முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி தனியாக இருக்க வேண்டும். இதனால் மற்றவர்களுக்கு மெட்ராஸ் 'ஐ' பரவுவதை தடுக்கலாம்.
கைகளை சோப்புப் போட்டு அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
போர்வை, தலையணை உறை, துண்டு, கைக்குட்டை போன்றவற்றை தினமும் சுத்தமாக துவைத்து பயன்படுத்த வேண்டும்.
கண்களை கைகளால் தொடக்கூடாது. ஒருவேளை கண்களைத் தொட நேர்ந்தால், கைகளை சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
சிறுவர்களுக்கு  மெட்ராஸ் 'ஐ' நோய் வந்தால், பள்ளிக்கு அனுப்பக்கூடாது. இதனால் மற்ற குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கலாம்.
கண் நோயால் பாதிக்கப்பட்டோர், ஆரோக்கியமான நீர்ச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்
நிம்மதியான உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவற்றை கடைபிடித்தால் கண் நோயில் இருந்து விரைவில் விடுபடலாம்.