பல்வேறு நோய்களை விரட்டும் முளைகட்டிய பயிரின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்
தினமும் ஒவ்வொரு முளைகட்டிய தானிய வகைகளை சாப்பிட்டு வந்தால் நல்ல ஆரோக்கியமான உடலை பெறலாம்
வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியத்தை சாப்பிட்டால், செரிமான கோளாறு, அல்சர் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும், எனவே மதிய வேளை சாப்பிடுவது மிகவும் சிறந்தது
முளைகட்டிய கொள்ளு, மூட்டு வலி மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது
முளைகட்டிய எள்ளு உடல் எடையை கூட்டும்
முளைகட்டிய கோதுமை புற்று நோய் வராமல் தடுக்கும்
முளைகட்டிய பச்சைப்பயிறு பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணமாக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்
முளைகட்டிய வெள்ளை கொண்டக்கடலை உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் தரும்
முளைகட்டிய கருப்பு உளுந்து தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது