Tap to Read ➤

உடற்பயிற்சியை எப்போது தவிர்க்க வேண்டும்?

உடல்நிலை சரியில்லாதபோது உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது.
HTML Tamil
உடல்நிலை சரியில்லாதபோது உடற்பயிற்சி செய்யலாமா? அல்லது வேண்டாமா? என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படுவது உண்டு.
உடல்நலம் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு, நம்முடைய உடல் கடுமையாக போராடும் என்பதால், உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது,
உடல் நிலை சரியில்லாத சமயங்களில் உடற்பயிற்சி செய்யாமல், ஓய்வெடுப்பது சரியான முடிவாக இருக்கும்.
உடல் வலிகள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் இருந்தால் உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
குமட்டல், இருமல் மற்றும் கழுத்துக்குக் கீழே பாதிப்பு அறிகுறிகள் தெரிந்தால், நன்றாக உணரும் வரை உடற்பயிற்சியை தவிர்க்கலாம்.
லேசான காய்ச்சல்தானே என நினைத்து, ஜிம்முக்குச் சென்றால், மற்றவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
லேசான பாதிப்பாக இருந்தாலும், உடற்பயிற்சியை தவிர்த்து, வீட்டில் ஓய்வு எடுத்தால், உடல் விரைவாக குணமாக உதவியாக இருக்கும்.
உடல் நலம் சரியான உடனேயே, ஜிம்முக்குச் சென்று கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.
முதலில் லேசான பயிற்சிகளுடன் தொடங்கி, மெல்ல மெல்ல கடினமான பயிற்சி என்ற நிலைக்கு செல்ல வேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சிக்கு போதிய ஆற்றல் இல்லை என உணர்ந்தால், பயிற்சியின் தீவிரத்தையும், கால அளவையும் குறைக்கலாம்.
மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தீவிர பாதிப்பாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே, உடற்பயிற்சி செய்வது நல்லது.