Tap to Read ➤

எந்தக் கிழமையில் எந்தக் கடவுளை வழிபட வேண்டும்?

கடவுளுக்கான உகந்த நேரத்தில் வழிபட்டால் முழு பலனும் கிடைக்கும்.
HTML Tamil
கடவுளை மனதார வழிபட நேரம், காலம், நாள், நட்சத்திரம் என எதுவும் பார்க்கத் தேவையில்லை.
எனினும், ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எந்த நாள், எந்த கடவுளுக்கு உகந்தது என பார்த்து, அந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் முழு பலன்களும் கிடைக்கும்.
எந்தெந்தக் கடவுளை, எந்தக் கிழமைகளில் வணங்கினால் பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.
ஞாயிறு

கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியப் பகவானை வணங்குவது சிறந்தது. இதனால் நம்மை அறியாமல் செய்த பாவங்கள் ஒழியும்.
திங்கள்

சிவாலய தரிசனம் நன்மை தரும். அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபட்டால் நல்ல அந்தஸ்து உண்டாகும்.
செவ்வாய்

முருகப் பெருமான், துர்க்கை அம்மன், அனுமன் ஆகியோரை வணங்கினால், எதிரிகள் காணாமல் போவார்கள்.
புதன்

 கிருஷ்ணர், விஷ்ணு பகவான், விநாயகரை வணங்குவது மிகவும் நல்லது.
வியாழன்

 தட்சணாமூர்த்தியை வணங்கலாம். நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கான உகந்த நாளாகும்.
வெள்ளி

வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபாடு செய்தால் நன்மை தரும். துர்க்கை அம்மனையும் வழிபடலாம்.
சனி

 சனிக் கிழமையில் சனீஸ்வரப் பகவான், பெருமாள், ஆஞ்சநேயரை வணங்கினால் உடல் நோய்கள் தீரும்.
முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை, எல்ல நாட்களிலும், எல்ல நேரத்திலும் வணங்கலாம்.
ஏகாதசி திதியில் பெருமாளையும், சதுர்த்தியில் விநாயகரையும், கிருத்திகையில் முருகப்பெருமானையும், பிரதோசத்தில் நந்தி பகவானையும், அஷ்டமியில் கால பைரவரையும் வணங்க வேண்டும்.