பருப்புகள் உணவுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், எண்ணற்ற அளவு புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது.
இந்திய உணவு வகைகளில் ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு வகையான பருப்புகள் உபயோகப்படுத்துகிறோம். அந்தவகையில், சத்தான பருப்பு வகைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை சுண்டல் என்று அழைக்கப்படும் கொண்டைக்கடலை 100 கிராமில் சுமார் 19 கிராம் புரதம் உள்ளது. மேலும், கொண்டைக்கடலையில் நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.
100 கிராம் வேகவைத்த கிட்னி பீன்ஸ் எனும் ராஜ்மாவில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளது. ராஜ்மா நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளது.
100 கிராம் வேகவைத்த உளுத்தம் பருப்பில் தோராயமாக 25 கிராம் புரதம் உள்ளது. இந்த பருப்பில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகமாக இருப்பதால் உணவில் கூடுதல் சத்தை கொடுக்கிறது.
கடலை பருப்பில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. 100 கிராம் வேகவைத்த கடலை பருப்பில் தோராயமாக 22 கிராம் புரதம் உள்ளது.
அர்ஹர் பருப்பு எனும் துவரம் பருப்பு கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். 100 கிராம் சமைத்த துவரம் பருப்பில் தோராயமாக 22 கிராம் புரதம் உள்ளது.
பாசிப்பருப்பில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதில் 100 கிராமமில் சுமார் 24 கிராம் புரதம் இருக்கிறது. இது எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.
மசூர் பருப்பில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. 100 கிராம் வேகவைத்த பருப்பில் தோராயமாக 26 கிராம் புரதம் உள்ளது.