Tap to Read ➤

உதவி இயக்குனராக பணியாற்றாமல் இயக்குனர் ஆனவர்கள் யாரெல்லாம் ?

தமிழில் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர்கள்!!
Sidhanathan K
தமிழ்த் திரையுலகில் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் நேரடியாகப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் சில முக்கிய இயக்குநர்களின் பட்டியல் இதோ.
1. கே பாலசந்தர்

தமிழ் சினிமாவில் 'இயக்குனர் சிகரம்' என பலரால் போற்றப்படும் இயக்குனர் பாலச்சந்தர். இவர் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனராகும் வாய்ப்பை பெற்றவர்.
திரைவட்டாரங்களில் பிரபலமான இவர், 1965ல் 'நீர்க்குமிழி' என்னும் படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.
2. பாலு மகேந்திரா

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இவர் 1982 முதல் 2000 வரை பல படங்களை இயக்கி பல விருதுகளை பெற்றுள்ளார்.
1972 இல் ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 1977 இல் கன்னடப் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.
3. மணி ரத்னம்

இவர் திரைப்படத் தயாரிப்பின் பின்னணியில் தனது பயணத்தைத் தொடங்கினார்.
பின் சினிமாவில் உள்ள ஆர்வத்தால் முதலில் 1983ல் 'பல்லவி அணு பல்லவி' என்ற கன்னட படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
4. கார்த்திக் சுப்புராஜ்

ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றிய இவர் பீட்சா படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
5. நலன் குமாரசாமி

பீட்சா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் 2013ஆம் ஆண்டு சூதுகவ்வும் படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
6. லோகேஷ் கனகராஜ்

'அவியல்' என்ற குறும்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். பின்னர் தமிழ் சினிமாவில் மகாநகரம் படத்தை இயக்கி பலராலும் பாராட்டப்பட்டார்.