சோம்பில் துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. எடை இழப்புக்கு இந்த பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு தண்ணீர்தான் பரிந்துரைக்கப்படுகிறது.
இரவு தூங்கும்முன்பு, ஒரு ஸ்பூன் சோம்பை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
சோம்பு நீர் குடிப்பதால் உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைந்து உடல் எடை குறையும். இவ்வாறு எடை குறைப்பில் உதவிடும் சோம்பு நீரை யார் தவிர்க்க வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.
இந்த சோம்பு நீர் சிலருக்கு தோல் அழற்சி (கொப்புளங்கள்) அல்லது தோலில் வெடிப்பு போன்ற பிரச்சனையை தரலாம்.
ஆஸ்துமா போன்ற அலர்ஜி இருப்பவர்கள் இந்த சோம்பு தண்ணீரை குடிக்க வேண்டாம்.
சோம்பு கருப்பை சுருக்கத்தை உண்டாக்கிவிடும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் சோம்பு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஏதாவது ஒரு நோய்க்காக மருந்து மாத்திரைகளை சாப்பிடுபவர்களும் சோம்பு தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்.