Tap to Read ➤

நெய் சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்

உடலில் சில பிரச்சனைகள் உள்ளவர்கள் நெய்யை தவிப்பது நல்லது.
HTML Tamil
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் நெய், உடலில் சில பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
பால் ஒவ்வாமை உள்ளவர்கள் நெய்யை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
சொறி, படை, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் நெய்யை தவிர்க்க வேண்டும்.
ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொலஸ்ட்ரால், கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இதய நோயாளிகள் நெய்யை தவிர்ப்பது நல்லது.
கல்லீரல், இரைப்பை, குடல் வலி போன்ற நோய்கள் இருப்பவர்கள் நெய்யை தவிர்க்கலாம்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், நெய்யை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
உடல் பருமனை குறைக்க முயற்சிப்பவர்கள் நெய்யை அதிகம் உட்கொண்டால், உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.
மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்கள் நெய்யை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிக்கடி அஜீரணம் மற்றும் வீக்கம் ஏற்படும் என்பதால், நெய் உட்கொள்வதை குறைத்துக் கொள்வது நல்லது.
மதிய உணவில் மட்டும் நெய் சேர்த்து சாப்பிட வேண்டும். இரவில் நெய் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
சூடான சமைத்த உணவில் மட்டுமே நெய் சேர்த்து சாப்பிட வேண்டும். பிரிட்ஜில் வைத்த உணவுகளில் நெய் சேர்த்து உண்ணக்கூடாது.
அசைவ உணவுகளில் நெய் சேர்க்கக்கூடாது. இரண்டிலும் கொழுப்பு அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.