Tap to Read ➤

இஞ்சி டீயை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்...

இஞ்சி டீயில் மருத்துவ குணம் நிறைந்து காணப்பட்டாலும், ஒரு சிலர் இதனை தவிர்ப்பது நல்லது.
HTML Tamil
சர்க்கரை நோய் இருப்பவர்கள் இஞ்சி டீயை அதிக அளவில் குடிக்கக் கூடாது. அதிகம் குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீயை முற்றிலுமாக தவிர்க்கா விட்டால், ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய படபடப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை குடிப்பதால், பித்த நீர் அதிகமாக சுரந்து, மிகுந்த வலியை ஏற்படுத்தி விடும்.
இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதால், செரிமான அமைப்பு பாதித்து, வாய் எரிச்சல், வயிற்றுப்போக்கு, ஒமட்டல் என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதனால் உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அசிடிட்டியை ஏற்படுத்துகிறது.
இஞ்சி டீயை அளவுக்கு மீறி குடித்து வந்தால் அமைதியற்ற நிலை, தூக்கமின்மை ஏற்படும். நெஞ்சு எரிச்சல் அதிமாகவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒமட்டல், வாந்தி ஏற்படும் அந்த சமயங்களில் இஞ்சி டீ குடிக்க விருப்பம் கொள்வர். அதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் இஞ்சி டீயை குடித்தால் அது வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
உடல் மெலிந்து இருப்பவர்கள் இஞ்சி டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உணவு விரைவாக செரித்துவிடும் என்பதால், எடை மேலும் குறைந்து விடும்.
அளவிற்கு அதிகமாக இஞ்சி டீயை குடிப்பதனால் இரைப்பைப் பிரச்சனை ஏற்படும் என்பதால், அளவாக குடிப்பது மிகவும் நல்லது.