Sidhanathan K       Mar 01, 2023

முட்டை வேக வைக்கும்போது சிறிது உப்பு சேர்ப்பது ஏன்..?

வேகவைத்த முட்டையை சாப்பிட்டால் அதன் சத்து முழுமையாக கிடைக்கும் என்பதால் பலர் அவித்த முட்டையை சாப்பிடுகின்றனர்.

முட்டைகளை வேகவைக்கும் முன், அவற்றை ஒரு முறை சுத்தமான தண்ணீரில் கழுவுவது நல்லது.

முட்டைகளை வேகவைக்கும் போது அடுப்பின் வெப்பம் குறைவாக இருக்க வேண்டும்.

முட்டை வேக வைக்க 10 நிமிடம் போதுமானது.

வேக வைக்கும் நீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்ப்பதால் முட்டை ஓடு விரிசல்களை தடுக்கலாம்.

அதேபோல் சிறிது உப்பு சேர்த்து முட்டைகளை வேக வைப்பதும் ஓடு விரிசல் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது

வேகவைத்த பிறகு, குளிர்ந்த நீரில் போட்டு வெப்பம் தணிந்ததும் அவற்றை உரிக்கலாம்.

உரிக்கும்போது ஓடுகளை தட்டி உள்ளங்கைகளில் வைத்து உருட்டி உரித்தால் விரைவில் ஓடுகள் உரிந்துவிடும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories