Sidhanathan K       Apr 24, 2024

இந்தியன் டாய்லெட்டை பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஏன்..?

இன்றைய காலகட்டத்தில் நாகரீகம் என்ற பெயரில் பெரும்பாலான இடங்களில் வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துகிறோம்.

வெஸ்டர்ன் டாய்லெட்டுகள் உட்காருவதற்கு வசதியாக இருந்தாலும், அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அந்தவகையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.

இந்தியன் டாய்லெட்டில் சாதாரணமாக கால் மூட்டுகளை மடக்கி அமர்ந்து மலம் கழிப்பது உடற்பயிற்சி போன்றது.

அதாவது, கால் மூட்டுகளை மடக்கி அமரும்போது, இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதோடு, தசைகள் பலப்படுத்தப்படுகிறது.

பொதுவாக, மலச்சிக்கல், குடல் அழற்சி, குடல் புற்றுநோய் போன்ற அனைத்து பிரச்சனைகளும் இந்திய டாய்லெட்டை பயன்படுத்துவதன் மூலம் தடுக்கப்படுகிறது.

இந்தியன் டாய்லெட்டில் கால்களை மடக்கி அமரும் போது, வயிற்றின் மீது ஏற்படும் அழுத்தத்தால், மலம் சிக்கலில்லாமல் முழுமையாக வெளியேறும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு இந்திய கழிப்பறை ஒரு தேர்வாகும்.

முதியவர்கள் மற்றும் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் வேண்டுமானால், வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தலாம். மற்றவர்கள் இந்தியன் டாய்லெட்டை பயன்படுத்துவது நல்லது.

வெஸ்டர்ன் டாய்லெட்டுகளால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை பயன்படுத்துவது பெண்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக, மேற்கத்திய கழிப்பறைகளை விட இந்திய கழிப்பறைகளையே அதிகம் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories