Varalakshmi N       Jun 15, 2026

முகத்தில் உள்ள துளைகள் ஏன் உருவாகின்றன?

முகத்தில் காணப்படும் துளைகள் (Pores) என்பது தோலின் இயற்கையான அமைப்பின் ஒரு பகுதியாகும். சில காரணங்களால் இவை பெரிதாகத் தோன்றி,       முகத்தின் அழகை பாதிப்பதாக தோன்றலாம்.

அதிக எண்ணெய் சுரப்பு, தோலில் அதிகமாக எண்ணெய் சுரந்தால் துளைகள் விரிவடையும்.

வயது அதிகரிக்கும் போது தோலின் இழுவைத் தன்மை குறைந்து துளைகள் பெரிதாகத் தெரியும்.

அதிக நேரம் வெயிலில் இருப்பதால் கொலாஜன் சேதமடைந்து துளைகள்       விரிவடைகின்றன.

துளைகளில் எண்ணெய், இறந்த செல்கள் மற்றும் அழுக்கு தேங்குவதால் அவை பெரிதாகத் தோன்றும்.

பருவ வயது, கர்ப்பம் அல்லது ஹார்மோன் மாற்றங்களால் எண்ணெய் சுரப்பு அதிகரித்து துளைகள் விரிவடையும்.

முகத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது அல்லது பொருந்தாத அழகு       சாதனங்களைப் பயன்படுத்துவது துளைகளை அடைக்கலாம்.

தோலில் போதுமான ஈரப்பதம் இல்லாதபோது துளைகள் அதிகமாகத் தெரியும்.

முகத் துளைகள் முற்றிலும் மறைய முடியாது, ஏனெனில் அவை தோலின இயற்கையான பகுதி. ஆனால சரியான தோல் பராமரிப்பு, சன்ஸ்கிரீன் பயன்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் அவற்றின்       தோற்றத்தை குறைக்க முடியும்.