Varalakshmi N       Jan 03, 2024

புருவங்களுக்கு இடையில் ஏன் தலைவலி வருகிறது?

கண்கள், நெற்றி, புருவங்களுக்கு இடையில் மற்றும் கன்னங்களை  சுற்றி ஏற்படும் வலி பொதுவாக சைனஸ் தலைவலியை குறிக்கும்

சில நேரங்களில் புருவங்களுக்கு இடையில் மட்டும் அதிக தலைவலி         ஏற்படுவதற்கு காரணங்கள் உண்டு

வெயில் காலத்தில் வறட்சியால், குளிர்ந்த நீர், தயிர், மோர்         ஆகியவற்றை அடுத்தடுத்து பருகுவதால் தலைவலி உண்டாகும்

பகல் மற்றும் இரவு உணவில் நீர்காய்கறிகளை சேர்த்துக்கொள்வது,         இரவிலும் குளிர்ந்த பண்டங்களை உண்ணுதல், உண்ட உணவு செரியாமல் மேலும் உணவு உண்ணுதல் போன்ற  காரணங்களும் உண்டு

உடல், மற்றும் மூளை உழைப்பு உள்ளவர்கள் வியர்த்த வியர்வையை         துடைக்காமல் விடுவது, இரவில் நீண்ட நேரம் தூங்காமல் கண்         விழித்திருப்பது போன்ற காரணத்தினால், நீர்க்கோவை உண்டாகி தலைவலி ஏற்படும்

குளிர்ந்த நீரில் நீண்ட நேரம் தலை குளிப்பது, உணவு உட்கொண்ட பிறகு         தலை முழுகுதல், ஈரத்துணியை தலையில் நீண்ட நேரம் கட்டி வைப்பதால், புருவங்களுக்கு இடையில் தலைவலி வருவதற்கு முக்கிய காரணமாகும்

அவரவர் உடல் வலிமை,  தட்பவெப்பம் நன்கறிந்து,  காலையில் நீராடலாம்

பொதுவாக அனைவருமே, காலைக்கடன் முடித்து, வெறும் வயிற்றோடு தண்ணீரில்  குளிப்பதே சிறந்தது