Tap to Read ➤

திருமணமான பெண்கள் ஏன் நெற்றியில் குங்குமம் இடுகிறார்கள் ?

குங்குமத்தின் பின்னால் உள்ள தெய்வீக பலன்கள் !!
Sidhanathan K
திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும்.
மேலும் சுமங்கலிப் பெண்களின் தலையின் நுனி சீமந்தப் பிரதேசம் எனப்படும். இதில் குங்குமம் இடுவதால் தரித்திரம் உண்டாகாது என்பது நம்பிக்கை.
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினமாகும்.
பெண்கள் எப்போதும் குங்குமத்தை மூன்று இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது பெண்களுக்கு தெய்வீக குணங்களை அளிக்கிறது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால் கொடுப்பவர் மற்றும் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யம் பலம் அதிகரிக்கும்.
பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
நெற்றிக்கண் மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது. பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் அமைதி கிடைக்கும், கோபம் கட்டுப்படும் மற்றும் சாந்த நிலையை உண்டாக்கும்.
கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களின் கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குங்குமம் இட்டால் புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் மற்றும் ஹார்மோன்கள் சீராக தூண்டப்படுகின்றன.