முட்டையின் மஞ்சள் கரு (Yellow Yolk) உடலுக்கு சத்தானதாக இருந்தாலும், பலருக்கு அதை சாப்பிட விருப்பம் இருக்காது. அதற்கு சுவை, ஆரோக்கியம், வாசனை போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.
வெள்ளை மட்டும் ஓகே Egg Yolk-ஐ பார்த்தாலே ஓடும் மக்கள், மஞ்சள் வேண்டாமா? மஞ்சள் கருவை பலர் விரும்பாத காரணங்கள் சிலவற்றை இப்பதிவில் காண்போம்
கொழுப்பு அதிகம் என்ற பயம் : மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் உடல் எடை கூடும் என்று பலர் நினைக்கிறார்கள்.
வாசனை பிடிக்காது: வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவில் வரும் தனி வாசனை சிலருக்கு வெறுப்பை தரும்.
ட்ரை டெக்ஸ்ச்சர் (Dry texture): மஞ்சள் கரு வறண்ட மாதிரி இருக்கும் என்பதால் சாப்பிட கஷ்டமாக உணர்கிறார்கள்.
ஜிம் & டயட்: “Egg white only” என்ற டயட் டிரெண்ட் காரணமாக பலர் மஞ்சள் கருவை தவிர்க்க ஆரம்பித்தனர்.
செரிமான பிரச்சனை மேலும் சிலருக்கு மஞ்சள் கரு சாப்பிட்டால் வயிற்று எரிச்சல் அல்லது அசௌகரியம் ஏற்படும்.
மஞ்சள் கருவை தவிர்ப்பதற்கான காரணங்கள் பல இருந்தாலும், அதில் உடலுக்கு தேவையான நல்ல சத்துகளும் நிறைந்துள்ளன. எனவே, அளவாக எடுத்துக்கொண்டால் அது ஆரோக்கியத்திற்கு பயன்தான்.