வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை வீட்டில் சாம்பிராணி தூபம் காட்டினால், பூச்சிகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமிகள் வீட்டிற்குள் வராது. அந்த அளவிற்கு சாம்பிராணி ஒரு நோய் தடுப்பு மருந்தாக செயல்படுகிறது.
பிரங்கின்சென்ஸ் (Frankincense) எனும் ஒரு மரத்திலிருந்து வடியும் பிசின் தான் குங்கிலியம் எனும் இந்த சாம்பிராணி ஆகும். அந்த பிசின் தான் கட்டியாக எளிதில் எரியும் தன்மையுடையதாக மற்றப்படுகிறது.
சாம்பிராணியுடன் சந்தனத்தை போட்டு தூபமிட்டால் வீட்டில் லட்சுமி கடாட்ஷம் நிலைத்திருக்கும். அதே போல் சாம்பிராணியுடன் அருகம்புல் பொடியை சேர்த்து தூபமிட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
சுமங்கலி பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், மாலையில் தீபம் ஏற்றி சாம்பிராணி தூபமிட்டால் பீடைகள் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சாம்பிராணி புகையை கடைகளில் தூபமிட்டால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக கண் திருஷ்டி விலகுமாம்.
அக்காலங்களில், பெண்கள் குளித்து முடித்ததும் தலைக்கு சாம்பிராணி புகை காட்டுவார்கள். அதேபோல் குழந்தையை குளிப்பாட்டி முடித்ததும் சாம்பிராணி புகையை சுவாசிக்க செய்வார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதை விளக்கமாக பார்க்கலாம்.
சாம்பிராணி புகையை சுவாசிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாவதுடன், உடல் உறுப்புகளில் எந்த வித நோய்த்தொற்றுகளும் வராமல் இருக்கும்.
அதேபோல் தலைக்கு சாம்பிராணி புகையை காட்டுவது, தலை முடி நரைகள் இல்லாமல் கருமையாக வளர உதவுமாம்.
சாம்பிராணி பிசினில் உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோயை குணப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள் வீடுகளில் சாம்பிராணி புகையை போடச் சொல்கிறார்கள்.
சின்ன வெங்காயத்துடன் சாம்பிராணியை அரைத்துத் தடவினால் உடலில் உண்டான கட்டிகள் மற்றும் வீக்கங்கள் நீங்கும்.
சாம்பிராணியுடன் காய்ந்த வேப்பிலை மற்றும் நொச்சியிலையை சேர்த்து புகையிட்டால் கொசுக்கள் ஓடிவிடும்.