Tap to Read ➤

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதற்கு என்ன காரணம்?

இந்த வீழ்ச்சி மீளுமா அல்லது இன்னும் நீளுமா ?
Sidhanathan K
கடந்த ஜூலை மாதம் முதல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79-80 என்ற அளவில் இருந்து வந்தது.
ஆனால் செப்டம்பர் 27 மாலை 5 மணிக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.66 பைசாவாக சரிந்தது.
ஆண்டின் தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு 73 ரூபாய் 74 காசுகளில் இருந்தது. தற்போது 7 ரூபாய் 92 காசுகள் அளவிற்கு தனது மதிப்பில் சரிந்துள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி கடந்த 21ம் தேதி ரெப்போ விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியது.
வட்டி விகித உயர்வு அறிவிப்பு வெளியான உடனேயே ஆசிய நாணயங்கள் வீழ்ச்சியடையத் தொடங்கின.
இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமின்றி ஜப்பானிய யென், யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் போன்றவற்றின் மதிப்பும் சரிந்து வருகிறது.
இது தவிர அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி நவம்பரில் 0.75 சதவீதமும், டிசம்பரில் 0.50 சதவீதமும் வட்டியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அடுத்த இரு மாதங்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பு உயருமா என்பது சந்தேகம் தான்.
இது மேலும் வீழ்ச்சியடையாமல் தடுப்பதற்கே ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என்றும் வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.