Tap to Read ➤

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் ஏன் வெளிநாடுகளில் பதிவு செய்யப்படுகிறது?

யூனிகார்ன் ஸ்டார்ட் நிறுவனம் என்ற அந்தஸ்த்தை பெற்றவை எவை?
Sidhanathan K
இந்தியாவில் தொடங்க வேண்டிய பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் பதிவு செய்து தங்கள் தொழிலைத் தொடங்கி வருகின்றன.
குலோபள் ஸ்டார்ட் அப் எக்கோ சிஸ்டம் குறியீடு 2021-ன் கீழ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற நாடுகளில் பட்டியலில் இந்தியா 20வது இடத்தில் உள்ளது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இந்தியா சிறந்த நாடு என்று பெருமையாகச் சொன்னாலும், சமீபகாலமாக போர்ச்சுகல், மால்டா, துபாய், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்து வருகின்றன.
இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மதிப்பீட்டு விதிகள் மற்றும் தன்னிச்சையான வரி விதிகள் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளன. ஆனால் பல நாடுகளில் அப்படி இல்லை.
ஸ்டார்ட்-அப்களுக்கு, நட்புரீதியான வணிகச் சூழல், மலிவான மூலதனம் மற்றும் திறமைகளை எளிதில் அணுகுவது ஆகியவையும் இந்திய ஸ்டார்ட் அப்கள் வெளிநாடுகளில் பதிவு செய்வதற்கு முக்கியக் காரணங்களாகும்.
இந்தியாவில் கிரிப்டோ, நிதிச் சேவைகள் மற்றும் இ-காமர்ஸ் ஸ்டார்ட்அப்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட துறைகளாகும்.
ஹென்லே & பார்ட்னர்ஸின் கூற்றுப்படி, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல வணிகர்களின் விருப்பமான நாடுகளாக உள்ளன.
கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் தொழில்முனைவோரை ஸ்டார்ட்-அப் விசாக்கள் மூலம் ஈர்க்கின்றன.
ஆதேபோல் இந்தியாவிலும் பலர், இங்கிலாந்து மற்றும் கனடா தொடக்க விசாக்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களால் பதிவுசெய்யப்பட்ட பல ஸ்டார்ட்அப்கள் குறுகிய காலத்தில் $1 பில்லியன் மதிப்பீட்டையும் யூனிகார்ன் ஸ்டார்ட்அப் அந்தஸ்தையும் அடைந்துள்ளன.
இதில் Polygon, Amagi, CommerceIQ, Hasura, Fractal Analytics, BrowerStack, Chargebee, InnovAccer, MindTickle உள்ளிட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் அடங்கும்.